மகிந்தவின் கிவுல் ஓயா திட்டமும் அநுரவும்...! விமர்சித்த சுமந்திரனை சீண்டிய முக்கிய அரசியல் புள்ளி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களை இலக்கு வைத்து மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டம், இனப்பரம்பல் மற்றும் நில உரிமை குறித்த புதிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
2011 இல் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இத்திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கையில் எடுத்துள்ள நிலையில், இது திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கான ஒரு நுட்பமான வழிமுறை எனச் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்துள்ள விமர்சனம், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நீர்ப்பாசனம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய பாரிய திட்டங்கள், காலப்போக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமைகளைப் பறித்து, எல்லை நிர்ணயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கடந்த கால கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாகவுள்ளது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கும் ஆளும் தரப்பு, இதனை அனைத்து மக்களுக்குமான பொதுவான அபிவிருத்தி என அடையாளப்படுத்துவதுடன், இத்தகைய விமர்சனங்கள் வடக்கின் வளர்ச்சியைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள் எனவும் சாடுகின்றது.
இந்தப் பின்னணியில், எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி, சுமந்திரனின் இக்கருத்துக்கள் வெறும் அரசியல் இலாபம் கருதியவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அபிவிருத்திக்கும் ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான இந்த மெல்லிய கோட்டில், கிவுல் ஓயா திட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் நகர்வு மற்றும் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள விமர்சனம் என்பவை தொடர்பில் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய நேருக்கு நேர் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |