நாட்டை முடக்குவதில் நடக்கும் சூழ்ச்சி?
அரசாங்கத்தை சுலபமாக வீழ்த்தும் சூழ்ச்சியாகவே நாட்டை தொடர்ச்சியாக முடக்குமாறு எதிர் கட்சியினர் கோருகின்றனர் என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டை தொடர்ச்சியாக மூடி வைக்குமாறு எதிர்கட்சி அழுத்தம் கொடுப்பதன் நோக்கம் அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்து ஆட்சியை பிடிப்பதற்கேயாகும்.
இப்போது நாடு முழுமையாக மூடிப்பட்டுள்ள நிலையில் பாதியே மூடியுள்ளதாக எதிர்கட்சி குற்றம் சுமத்துகிறது. கைத்தொழில் பேட்டைகளை மூடியதும், ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் நாட்டுக்கு வரும் வௌிநாட்டு செலாவணி இல்லாது போகும், டொலர் இல்லாது போன பின் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது போகும்.
அப்படி ஒரு நிலைமை உருவான பின் இந்த அரசாங்கத்திற்கு முடியாது வீட்டுக்கு அனுப்புவோம் என்று கோஷம் எழுப்பிக் கொண்டு வீதிக்கு இறங்குவார்கள் என்றார்.