இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா? புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா? மக்களிடமே அதிகாரம்!

media sri lanka government journalist mahinda desapriya
By Kalaimathy Jul 21, 2021 11:12 AM GMT
Report

மக்களுடைய வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்ளிட்ட மக்களுடைய நலன் சார்ந்த விடயங்களை ஏற்படுத்துவதற்கு, உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு, இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா? அல்லது இன்னுமொரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா? என்ற முடிவெடுப்பதற்கு மக்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு நாட்டைப் பொறுத்தவரையில் 3 வகையான முக்கிய துறைகள் காணப்படுகின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், அமைச்சரவை, நீதித்துறை, ஆகியனவாகும் சட்டங்களை ஆக்குகின்ற ஒரு உயர்பீடம் தான் நாடாளுமன்றமாகும். அரசியல்வாதிகள் அந்த சட்டவாக்க முயற்சிகளுக்குத் தேவையான விடயங்களையும், விதிமுறைகளையும், முன்வைக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கின்ற விடயத்தில் இந்த மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். வாக்குரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை, கருத்துக் கூறும் உரிமை, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது இன்னுமொரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா மக்களுடைய வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்ளிட்ட மக்களுடைய நலன் சார்ந்த விடயங்களை ஏற்படுத்துவதற்கு உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு மக்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சட்டத்திற்கு முரணான போராட்டங்கள் நடைபெறுகின்ற போது, வன்முறை போன்ற சந்தர்ப்பங்களுக்கும் ஆளாகுன்றனர். இந்நிலையில் எம்மிடம் உள்ள ஆயுதம் தான் தகவலறியும் சட்டமூலம். அதனைப் பயன்படுத்தி உரிய அதிகாரிகள் மட்டத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டு இணக்கமான முறையில் மக்களுக்கு வழங்கும் விதத்தில் நாம் செயப்படல் வேண்டும்.

ஏதாவது ஒரு சம்பவத்தில் போராட்டங்களுக்காக வீதியில் இறங்குவதற்கு முன்னர் இணக்கமான முறையில் செயற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தேர்தல் காலத்தில் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது தொடர்பிலும் கேள்விக்குட்படுத்தவும், நமக்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இவ்வாறு செய்வதுதான் போராட்டங்களை செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளும் சாலச் சிந்த விடையமாக அமையும். ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு பல விடயங்களை ஆராய வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது. குறிப்பாக விமர்சன ரீதியான கட்டுரைகளை எழுத்தி கேள்விகுட்படுத்துவதன் மூலம் மக்களின் வாக்குரிமைகளைப் பாதுகாக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

நீண்ட நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்ற மக்களின் வாக்குரிமை பற்றி தேர்தல் கண்ணிப்பு அமைப்புக்கள் மாத்திரமின்றி ஊடக நிறுவனங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும். அதுபோல் வட மாகாணத்திலிருந்து நாடற்றவர்களாக இந்தியாவிலே தங்கியிருப்பவர்கள் தொடர்பிலும் ஆய்வு ரீதியில் செயற்பட்டு தீர்வு கிட்டுவது சாலச் சிறந்தது.

தற்போதைய நிலையில் கொவிட் - 19 வக்சின் தொடர்பில தமிழ், முஸ்லிம், சிங்கவர் என சிலர் இன்னும் ஏற்க மறுக்கினறனர் ஏன் என ஆராய வேண்டும். ஊடகவியலாளர்கள் மிவும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்குகின்றார்கள். இரண்டு ஊடகவியலாளர்கள் வாக்குரிமையை நீதிமன்றம் சென்று பெற்றுக் கொடுத்த விடயம் காணப்படுகின்றது.

செய்திப் பத்திரிகை ஒன்றை ஒரு அரசியல்வாதி விற்பனை செய்வதற்கு தடை ஏற்படுத்தியபோது அதற்கு எதிராக தகவல் உரிமை மறுப்பப்படுகின்றது என நீதிமன்றம் செற்று இதனைப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே மக்களுடைய பிரச்சனைகளை வெளிக் கொணர்கின்ற தூணாக ஊடாகவியலாளர்கள் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்பினரும் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற போதே அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு குழுக்கள் என சிலர் நினைக்கக்கூடும். அது அவ்வாறு அல்ல ஒரு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளைக் கொண்டு செல்வதாகத்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

மக்களுக்குக் காணப்படுகின்ற வாக்குரிமையை, சமூக நீதியைக் கொண்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதையும் சிந்திக்க வேண்டும். கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு, மினுவாங்ககொட, நிக்கவரட்டிய, போன்ற இடங்களில், ஏற்பட்ட சம்பவங்களின் வேதனை எமக்கும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடல் மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு ரீதியாகவும் செயற்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களின் நிலமை என்ன என்பது தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். அனைவரும் சிந்துவது ஒரே மாதிரியான இரத்தம் என்பதை கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே ஊடகவியலாளர் அன்பு கருணை, தாராளகுணத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

எல்லை நிருணையம் தொடர்பில் பொலிஸ், உள்ளூராட்சி, பிரதேச செயலகம், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் செயற்பட்டு வருகின்ற மாகாண சபை தேர்தல் வரவேண்டுமாக இருந்தால் ஒரு முறையானதொரு எல்லை நிருணையம செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற வேண்டும் அல்லது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தான் அது நடைபெற வேண்டும் என எனது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கின்றேன்.

தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெறவுள்ளது என்பது தொடர்பில் தெரியாது. குறிப்பாக ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்ற வட்டார முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தனிப்பட்ட பிரேரணையைக் கொண்டு வந்து அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு அதனை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்யப்பட்டு அது நாடாளுமன்றத்திலே அங்கீகரிக்கப்பட்டு அது புதியதொரு விடங்களுக்குச் செல்லக்கூடிய விடயங்களும் காணப்படுகின்றன.

எனவே ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், முக்கியமானவர்காளக்க காணப்படுகின்றார்கள். தவறு செய்யாதவர்களாக அரசியல்வாதிகள் இருத்தல் வேண்டும். சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். நல்ல மனிதர்களை குறிப்பாக இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் போன்ற புதிய விடயங்களையும் புகுத்த வேண்டியுள்ளது. இவை அலசி ஆராயப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.    

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி