சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாட்டிற்கான முயற்சி - சிறிலங்கா கடற்படையின் முற்றுகை!
By Kalaimathy
நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகையை எடுத்துச் சென்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகினை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற விசேட புலனாய்வுத் தகவல் ஒன்றிற்கு அமைய இலங்கை கடற்படையால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.