இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு: அமைதியான நகர்வுகளை முன்னெடுக்கும் சீனா
இலங்கை அரசியல் மாற்றத்தினால் அநுர குமாரவை தமது பக்கம் கொண்டுவரும் நிர்ப்பந்தம் அமெரிக்க, இந்தியாவிற்கு உள்ளதுடன், சீனா அமைதியான முறையில் நகர்வுகளை முன்னெடுப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வரலாற்றில் 1980 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கினை இரண்டாக பிரித்து இலங்கை மண்ணிலிருந்து இந்திய இராணுவத்தை விரட்டுவதே இக்கட்சியின் முதலாவது அனுகூலமாக காணப்பட்டது.
சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் இறக்கப்பட்டவர்களும் இந்திய இராணுவத்திரே. எனவே இந்திய இராணுவத்தினரை நாட்டிலிருந்து விரட்டுவதே தேசிய மக்கள் சக்தியின் முதல் கோரிக்கையாக உள்ளது.
அரகலய போராட்டத்தின ஊடாக உறவினை பேணிய அமெரிக்காவிற்கு அந்த உறவினை தொடர்ந்தும் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொர்பான மேலதிக விபரங்களை கீழ் வரும் காணெளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |