இத்தாலி சிறையில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இலங்கையரின் சடலம்
mahinda
china
political
gota
tamil news
By S P Thas
இத்தாலி நாட்டில் சிறைச்சாலையில் தொங்கிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாலியின் பிரோய்னோஸ் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையறையில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. 69 வயதான சந்தன கோரளகே என்பவரே இறந்துள்ளதாக இத்தாலி பொலிஸார் கூறியுள்ளனர். இவர் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்