சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது!
srilanka
police
colombo
arrested
By S P Thas
கைது கடன் அட்டை மோசடி தொடர்பாக, கல்கிஸ்ஸையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணைய வாடிக்கையாளர் சேவை மையம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று சந்தேகத்துக்குரியவர்களும் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிசையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் காவல்துறை தேடுதல் நடவடிக்கை நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது ஒரு மடிக்கணினி, 30 போலி கடன் அட்டைகள் மற்றும் போலி அட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி