அடுத்தவாரம் கூடவுள்ள நாடாளுமன்றம்! இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்
கொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில், இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தையும், வாக்கெடுப்பையும் அடுத்த மாதம் 5ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில், எதிர்க்கட்சி இரண்டு நாட்கள் விவாதத்தைக் கோரியபோதும், அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.