நாட்டின் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்ததப்பட்டிருந்தால் ரிஷாட் இருக்கும் இடத்தில் ஹக்கீமும் இருந்திருப்பார்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 கைதிகள் விடுவிக்கப்பட்டமை மற்றும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் சட்டம் உரிய முறைமையில் நடைமுறைப்படுத்ததப்பட்டிருந்தால், ரவூப் ஹக்கீம் தற்போது, ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் இருக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யதார்த்தம் அமைப்பின் பொதுச்செயலாளர் கிரிஹிப்பன்ஆரே விஜித தேரர்,
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய ரில்வானை பார்க்கச் சென்றதை வெளிப்படுத்தியமை தொடர்பிலான பிரச்சினை காரணமாகவா நாடாளுமன்றில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றை தாக்கி அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றது. இருப்பினும் சானி அபேசேகர, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் குரல் பதிவுகளில் அந்த அநீதி தெரியவந்தது.
அந்த அநீதிக்கு நீதியை நிலைநாட்டுவதையே ஜனாதிபதி செய்ததாகவும் அவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சஹ்ரான் ஹஸீமின் சகோதரர் குண்டுகளை பரிசோதித்து பார்ப்பது தொடர்பான விடயங்கள் தென்னிலங்கை ஊடகமொன்று காண்பித்த போது, ரவூப் ஹக்கீமுக்கு வலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.