ஜயந்த கெட்டகொட தொடர்பில் வெளியானது வர்த்தமானி!
parliament
sri Lanka
ajith nivard cabral
jeyanda gettagoda
By Kalaimathy
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் வெற்றிடமாகவுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, புதியவரை நியமனம் செய்வதற்கான வர்த்தமானி வெளியானது.
மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள அஜித் நிவாட் கப்ராலின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கான வர்த்தமானியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவர் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்காக தன்னுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.