கோட்டாபயவின் உத்தரவு - வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கான பிசிஆர் சோதனை நடைமுறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் பிசிஆர் பரிசோதனைக்காக ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு திரும்பும் இலங்கையர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் பிசிஆர் சோதனைக்காக ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியமில்லை. நாட்டிற்கு வந்தவுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,