புதிய சகாப்தத்திற்குள் நுழையும் இலங்கை - பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு அதுதொடர்பான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசிகள் முழுமையாக ஏற்றும் நடவடிக்கைகள் மிக வேகமாக இடம்பெறுவதாகவும், அடுத்த சில நாட்களில் இதன் முழுமையான பலனை அடைய முடியும் என்றும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,