நள்ளிரவு ஒப்பந்தத்தால் ஆளும் தரப்பிற்குள் பனிப் போர்- இணக்கப்பாட்டை எட்டாத மஹிந்தவுடனான சந்திப்பு!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் இலங்கை வசமே இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் முடிவெடுத்திருந்தன.
இந்நிலையில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இச்சந்திப்பின் போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதனையடுத்து மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் நேற்றைய சந்திப்பு விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில்,
கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.