பொலிஸாரின் தேடுல் வளையத்திற்குள் பொப் மாலி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!
police
investigation
public
call
sri Lanka
By Kalaimathy
களுதுர சமிந்த தாப்ரேவ் என்கிற, ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸாரால் பொதுமக்களிடம் உதவியை கோரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சந்தேக நபரின் புகைப்படத்தையும் பகிரங்கப்படுத்தியுள்ளதுடன், அவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
பேருவளை கடற்பரப்பில் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான இவர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.