இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு
#Christmas #Sri Lanka #Police
By Vasanth
நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்புக்களை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்றும் நாளையும் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாளைய தினம் கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படவுள்ளதால்
திருப்பலி ஒப்புக் கொடுத்தல் மற்றும் விசேட ஆராதனைகளுக்காக இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி