காவல்துறையினரின் சம்பள கட்டமைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கை காவல்துறையினருக்கு தனியான சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (10) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அமைப்பு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சம்பள அமைப்புக்கான வரைவு முன்மொழிவு ஏற்கனவே பதில் காவல்துறை மா அதிபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த முன்மொழிவை இறுதி செய்ய நிதி அமைச்சகத்துடன் வரும் மாதங்களில் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவை ஒப்புதல் மற்றும் நிதி மதிப்பாய்வுக்கு உட்பட்டு, 2026 வரவு செலவு திட்டங்களில் முன்மொழியப்பட்ட சம்பள அமைப்பு சேர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
