சமூக ஊடகங்களில் பரவும் காவல்துறை சீருடை : அமைச்சர் வெளியிட்ட தகவல்
சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் உத்தேச காவல்துறை சீருடை வடிவமைப்புகள் குறித்து அரசாங்கம் எந்தவித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காவல்துறை சீருடையில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. எனினும், சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் வடிவமைப்புகள் பரிசீலிக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
சீருடையை மாற்றுதல்
காவல்துறை சீருடையை மாற்றுவதுடன் மாத்திரம் அரசாங்கத்தின் கவனம் சுருங்கிவிடவில்லை, காவல்துறை சேவையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
காவல்துறை அதிகாரியொருவரின் சீருடையை மாற்றுவதால் மாத்திரம் அவர்களின் நடத்தையிலோ அல்லது கடமையாற்றும் அணுகுமுறையிலோ தானாக மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது.
அமைதியைப் பேணக்கூடிய மற்றும் பொதுமக்களுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பக்கூடிய காவல்துறைப் படை அவசியமாகும்.
அத்துடன், தேவையான தகுதிகள் மற்றும் திறன்களைக் கொண்ட புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அறிவும் திறமையும் மிக்க காவல்துறை அதிகாரிகளை உருவாக்க வேண்டும்.
புதிய சீருடையின் கீழ் ஏற்கனவே உள்ள நடைமுறையைத் தொடர்வதை விட, புதியதும் மேம்பட்டதுமான காவல்துறை சேவையே இலங்கைக்குத் தேவை“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |