கடும் கவலையில் நிதியமைச்சர் பசில்
இவ்வாண்டு நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது. நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சபையில் தெரிவித்துள்ளார்.
61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொவிட் நெருக்கடிகளுக்கு நாமும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. நாடு பாரிய சர்வதேச வருமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது.
அதேபோல் தேசிய நிதி விடயங்களிலும், திறைசேரி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வேளையில் முழு அரசாங்கம் மட்டுமல்லாது பொறுப்புள்ள சகலரும், எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் நாம் செயற்பட வேண்டும். இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது, அது முடியாத காரியம் என்பது எமக்கு தெரியும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,