ஹிட்லராக மாற முயற்சித்து வரும் சரத் வீரசேகர!
ஒழுங்கு விசாரணைகள் முதலில் நடத்தப்பட வேண்டியது தனக்கு அல்ல எனவும் சரத் வீரசேகர, காமினி லொக்குகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோருக்கே நடத்தப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
நான் ஒழுங்கு விசாரணைகளை கண்டு அஞ்சவில்லை. இந்த இரண்டு அமைச்சர்கள் காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜகத் குமார இதனை கூறியுள்ளார். எதிர்ப்பு ஆரப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை பயங்கரவாதிகள் எனக் கூறி, சரியானவற்றை கூறும் நபர்களுக்கு ஒழுங்கு விசாரணை நடத்துமாறு கூறும் சரத் வீரசேகர ஹிட்லராக மாற முயற்சித்து வருகிறார்.
சரத் வீரசேகரவின் நடவடிக்கைகள் காரணமாக ஆசிரியர்களின் போராட்டம் அதிகரித்தது. தற்போது சத்தமிடும் சிலர் தமது தவறுகள் வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் நல்லாட்சி காலத்தில் மறைந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,