மின் தடை தொடர்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
srilanka
peoples
power cut
By S P Thas
மின் தடை தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பரிந்துரைகள் முன்வைக்கப்படும். இதற்கமைய தரவுகள் சேகரிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
மின்னுற்பத்தி தேவையான மூலப் பொருட்களின் அளவு, மின்சாரத்திற்கான தேவை மற்றும் விநியோகம் என்பவற்றின் அளவுகள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்கமையவே மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
சுமார் 2, 750 மெகாவோட் மின்சார தேவை காணப்படுமாயின் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.
தற்போது அந்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி