இலங்கையில் தயாராகவுள்ள கொரோனா தடுப்பூசி?
srilanka
corona vaccine
product
By Jaso
கொரோனா தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்றைய தினம் கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், சினோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லயிஃப்சயன்ஸஸ் தனியார் நிறுவனம் ஆகிய இணைந்து, கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்