கொழும்பில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்த கோட்டாபய, ரணில்: வலுக்கும் போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள இராணுவம்
வலுக்கும் போராட்டம்
அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டபாய ராஜபக்ச வெளியேறியதுடன், கொழும்பு 7இல் உள்ள தனது இல்லத்தில் இருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தங்களுடைய இருப்பிடத்தை அறிவிக்கவில்லை எனவும், சிலர் தொலைபேசிகளை துண்டித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்த கோட்டாபய,ரணில்
பலத்த இராணுவ பாதுகாப்பு
கொழும்பில் மக்கள் அதிக வாழும் தோட்டங்கள், குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் பலத்த இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட பிரபுகளின் வீடுகளுக்கு இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.