இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடி- உண்மையை அம்பலப்படுத்திய கோப் குழு!

parliament sri Lanka cope sri Lanka transport board
By Kalaimathy Oct 09, 2021 04:34 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 90 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு கண்டறிந்துள்ளது.

கணினி மற்றும் உபகரண கொள்வனவின் காரணமாக பல கோடி ரூபாய்கள் மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை 2018ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை ஒரு கோடியே 52 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்தபோது, இத்தொகையைவிட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 11 கோடியே 33 இலட்சத்து மூவாயிரத்து 750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதனால் 2018ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட 8  கோடியே 99 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடியபோதே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது. உரிய செயல்முறை இல்லாமல் பணத்தை செலவழிப்பது குறித்து கோப் குழு தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், 125 சொகுசு பஸ்களுக்கு கமரா மற்றும் ஜீ.பி.எஸ் கட்டமைப்பைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளைக் கொள்வனவு செய்ய தனியார் நிறுவனத்துடன் மூன்று கோடியே 36 இலட்சத்து 28 ஆயிரத்து 840 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்தக் கருவிகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை இயங்கும் நிலையில் காணப்படவில்லையென்றும் கோப் குழுவில் தெரியவந்தது.

விசேடமாக இந்த பஸ்களில் பணியாற்றுபவர்கள் வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டு கொள்முதல் திட்டத்துக்கு அமைய 1,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களுக்கு 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிப்பாளர் சபையின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் 2018ஆம் ஆண்டு 2,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய 7 கோடியே 59 இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அனுமதி இன்றி 1,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்தக் கொள்வனவின் ஊடாக எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறாமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், பணிப்பாளர் சபையின் பதவிகள் சிலவற்றின் குறைபாடுகள் குறித்தும், பயன்பாட்டில் இருக்கும் ஐயாயிரத்து 921 பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்பொழுது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் 10 வருடங்கள் பழைமைவாய்ந்த இரண்டாயிரத்து 742 பேருந்துகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்