அழிவை தடுக்கும் இறுதி ஆயுதம் பயணக்கட்டுப்பாடாகவே இருக்கும்! கடுமையான எச்சரிக்கை
வைத்தியசாலைகளில் கொள்ளவு திறன் உச்சத்தை மட்டத்தை நெருங்கி வருவதால், கொவிட் நோயாளிகள் மாத்திரமின்றி ஏனைய நோயாளர்களும் மரணமடைவதை தவிர்க்க முடியாது என சுகாதார மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காலம் தாழ்த்தாது உடனடியாக கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசியை முற்றாக செலுத்தி முடிக்க இன்னும் இரண்டு மூன்று மாத காலம் செல்லும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்தும் நோய் பரவலை தடுப்பதற்கு இருக்கும் பிரதான ஆயுதம் கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாகும் எனவும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
காணப்படும் நிலைமையில், கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏனைய நோயாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை குறைக்க நேரிடும்.
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தேவையான கட்டில்கள் மற்றும் ஒக்சிசன் மாத்தரமின்றி, மருத்துவர்கள், தாதிகள் உட்பட ஏனைய பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இன்னும் சில தினங்களில் நாடு மிகப் பெரிய நெருக்கடிக்குள் செல்லும் என்பது மிகவும் தெளிவானது. இந்த நிலையில், மிகவும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் தற்போது உச்சத்திற்கு வந்துள்ள சிகிச்சை அளிக்கும் இயலுமையானது. ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வரும் எனவும் விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் கூறியுள்ளது.
இதன் மூலம் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தற்காலிகமான நிவாரணத்தையேனும் வழங்க முடியும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.