இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்?
தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்போது சிறந்த முறையில் அத்திட்டத்தை முன்னெடுத்து செல்கிறது.
மேலும் எவ்வித உதவிகளும் இன்றி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகளினால் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
எவ்வாறு எனினும், அமெரிக்கா மற்றும் இத்தாலியுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை குறைவாக கொண்ட இலங்கையில் இந்த திட்டம் விரைவுபடுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
தாமதமான தடுப்பூசித் திட்டம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடையாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பல நோயாளிகள் மற்றும் இறப்புகள் பதிவாக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.