தமிழீழ விடுதலைப்புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்களா? கஜேந்திரகுமார் வெளியிட்டுள்ள கருத்து!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உண்மையாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில் இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடியுமெனவும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளளார்.
தொடர்ந்தும் கருதுத் தெரிவித்த அவர்,
யுத்தம் நிறைவடைவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் அரசாங்கத் தரப்பு ஊடுருவியுள்ளதாக அப்போது ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்ததாகவும், ஆகவே அந்த தரப்பினரால் புலிகள் அமைப்பிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஏதாவது குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப்புலிகளாலும் இழைக்கப்பட்ட யுத்தங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என தாம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.