இலங்கைக்கு சர்வதேசத்திலிருந்து வந்த எச்சரிக்கை செய்தி!
இலங்கையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது தொடர்பில் இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் 15.8% அளவான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளுக்கு நாள் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.