சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!
மத்திய கிழக்கு நாடுகளில் சிறிலங்கன் (Sri Lanka) எயார்லைன்ஸ் நிறுவனம் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall) தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு (Dubai) அண்மையில் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்தே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு அண்மை நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டும் அவர்களின் இலங்கைக்கான பயணத்தை இலகுபடுத்தும் வகையிலும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இரண்டு அல்லது மூன்று புதிய விமானங்களை குத்தகைக்கு எடுப்பதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சேவையை விஸ்தரிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |