அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன் விமானம்...வெளியானது காரணம்!
சிறிலங்கன் எயார்லைன்சின் (Srilankan Airlines) UL 503 விமானத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தடம் மாறிய பயணம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெளிவூட்டலை வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் 01ஆம் திகதியன்று, 272 பயணிகளுடன் லண்டனுக்குப் (London) புறப்பட்ட UL 503 விமானம், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஒரு பயணி சம்பந்தப்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக வியன்னாவுக்குத் (Vietnam) திருப்பி விடப்பட்டதனை சிறிலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது, இதன் விளைவாக, விமானம் UL 503 மறுநாள் புறப்படுவதற்கு மாற்றப்பட்டது, ஐரோப்பாவிற்கு விசா பெற்ற அனைத்து பயணிகளுக்கும் வியன்னாவில் தங்குமிடம் வழங்கப்பட்டது.
மன்னிப்பு கேட்ட நிர்வாகம்
பின்னர் குறித்த விமானம் மறுநாள் மே 02, 2024 அன்று தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்து, லண்டன் நேரப்படி இரவு 09.30 மணிக்கு லண்டனை வந்தடைந்தது.
இந்த தாமதத்தின் மறுமுனை விளைவாக, 2024 மே 1 அன்று லண்டனில் இருந்து கொழும்புக்கு (Colombo) புறப்படவிருந்த சிறிலங்கன் எயார்லைன்சின் UL 504 விமானத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது, இந்த விடயம் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சோதனை செய்தவர்களுக்கு தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இந்த விமான தாமதம் எங்கள் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது, மேலும் அவர்களின் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்." என்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |