அவசர தரையிறக்கம் - சிறிலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற யுஎல் 195 சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை என சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார் லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஹைட்ரோலிக் அமைப்பில் சிறிய தவறு

விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இது ஒரு சாதாரண நிலைமையே. இவ்வாறான நிலைமைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக விமானக் குழுவினர் முழுப் பயிற்சி பெற்றுள்ளனர்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் குறித்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லியைச் சென்றடைந்தது எனவும் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதாகவும், இந்த உணர்வில் தான் UL 195 இன் விமானிகள் விமானத்தில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தரையிறங்கும் நடைமுறைகளைப் பின்பற்றி உடனடி நடவடிக்கை எடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.