வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம்!
சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானமொன்று மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட UL 605 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு
இந்த விமானம் இன்று மாலை 6.16 மணியளவில் மெல்பேர்னிலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பயணிகளுக்கும் தற்காலிக தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி
மேலும், இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து பொறியியலாளர்கள் குழுவொன்று தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
SriLankan Airlines flight UL 605 from Melbourne to Colombo made a safe return back to the Melbourne Airport shortly after taking off due to a technical issue pic.twitter.com/xUwJO6vJPi #LKA
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) February 12, 2024
இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை தொடர்ந்து, குறித்த விமானத்தின் இலங்கை நோக்கிய பயணம் தொடர்பான திகதி மற்றும் நேரம் அறிவிக்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |