இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சில விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
குறித்த விடயத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி, சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களிலிருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உதவி தேவைப்படும் பயணிகள்
வர்த்தக விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைப் பாதிக்கும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. வழக்கமான விமானச் சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழல் நிலவுவதாக மதிப்பிடப்பட்ட பின்னர் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி அல்லது கூடுதல் தகவல் தேவைப்படும் பயணிகள், தங்களது பயண முகவர்களையோ, சவூதி அரேபியா மற்றும் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களையோ தொடர்பு கொள்ளுமாறு அல்லது விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை விமான நிறுவனத்தின் இணையதளமான www.srilankan.com இல் காணலாம் .
யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - miss ஆன முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |