மொஸ்கோவுக்கான விமான சேவையை இடைநிறுத்தியது சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்லைன்ஸ் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
"தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள சர்வதேச நிதி மற்றும் விமான காப்புறுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகள் உள்ளது. மேலும் இது ரஷ்யாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமான நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கிறது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறு அறிவித்தல் வரை மொஸ்கோவுக்கான நடவடிக்கைகளை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக எடுக்கப்பட்ட இந்த முடிவால் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ் விமான சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னர் கொழும்பு மற்றும் மொஸ்கோ இடையே வாராந்திர இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.