''பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது" கெமுனு விஜேரத்ன
தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாதென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில், லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள்
அத்தோடு தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்ற நிலையில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு நான்கு வீதத்தை தாண்டவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் லங்கா ஆட்டோ டீசல் விலை 28 ரூபாவால் உயர்த்தப்பட்ட போதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லையென கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கட்டண திருத்தம்
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கை ஜூலையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க சங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவு நடைமுறையில் உள்ள டொலர் விலை மற்றும் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு மற்றும் பேருந்து பாகங்கள், பழுதுபார்ப்பு, உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுமென கெமுனு விஜேரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |