காலிமுகத்திடல் போராட்ட களத்தில் தமிழ்மொழியில் பாடப்பட்ட இலங்கையின் தேசிய கீதம்(video)
tamil
colombo
national anthem
galle protest
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் இன்றையதினம் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
முன்னதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் தேசிய கீதத்தை தமது மொழியில் பாடியதை அடுத்து பின்னர் தமிழ் மொழியில் கீதம் பாடப்பட்டது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது, ஆனால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் 2020 இல் இந்த நடைமுறையை நிறுத்தியது.
இதேவேளை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிங்கள மக்களால் டுவிட்ட பதிவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
— Gopiharan Perinpam (@gopiharan) April 17, 2022

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி