காசாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : வெளிவிவகார அமைச்சு தகவல்!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போரில், காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை (24) இலங்கையை வந்தடைந்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய இலங்கையர்கள்
சிறிலங்காவின் விமான நிலையத்தை வந்தடைந்த நான்கு இலங்கையர்களும், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு, பாதுகாப்பாக தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரபா எல்லையில் வைத்து குறித்த நான்கு இலங்கையர்களையும் கெய்ரோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் அதிகரிகள் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் உதவியுடன், மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ரபா எல்லையினூடாக 15 இலங்கையர்கள் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்