உலகின் மிகப்பெரும் பணக்காரருக்கு உறுதுணையாக நிற்கும் தமிழன்
உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கு தமிழர் ஒருவர் உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கின் நிர்வாக பொறுப்புகளில் எடுக்கப்படும் முடிவுகளில் மஸ்க்கிற்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்ற தமிழர் உதவி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில்
Now that the word is out: I’m helping out @elonmusk with Twitter temporarily with some other great people.
— Sriram Krishnan - sriramk.eth (@sriramk) October 30, 2022
I ( and a16z) believe this is a hugely important company and can have great impact on the world and Elon is the person to make it happen. pic.twitter.com/weGwEp8oga
இந்நிலையில், ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில்,"டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியமாக்குவார் என்றும் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பிறப்பு

சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம் சென்னையிலேயே பொறியியல் முடித்திருக்கிறார். இவர் மைக்ரோசொப்ட், பேஸ்புக், டுவிட்டர், ஸ்னாப்சாட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் (a16z) நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ள ஸ்ரீராம் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகிறார். அவ்வப்போது தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து பாட்காஸ்ட்களையும் இவர் ஹோஸ்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.