தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு - ஶ்ரீரங்கேஸ்வரன்

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam
By Beulah Aug 04, 2023 10:47 AM GMT
Report

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர்தான் தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகியாகவும் துயராகவும் இருந்துவருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும், யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அத்தகைய தமிழ் காங்கிரஸ் குழுவினரை தமிழ் தேசத்தில் இருந்த அகற்றினால் தான் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டியும் ஒற்றையாட்சியும்

தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு - ஶ்ரீரங்கேஸ்வரன் | Srirangeswaran Telling About Gajendrakumar Sl

“தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு அல்லது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏதாவது ஒரு சாட்டுப் போக்கு காட்டி குந்தகம் எற்படுத்தி தாங்கள் மட்டும்தான் தமிழ் தேசியவாதிகள் என கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் குழுவினர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி அதற்கு பின்னரான காலத்திலும் சரி தமது சுய இலாபங்களை மட்டுமே முதன்மையாக கொண்டு இன்னொரு தரப்பினரது நிகழ்ச்சி நிரலுக்காக ஓலமிட்டு வருகின்றனர்.

இன்று சமஸ்டி தான் தமிழருக்கு வேண்டும் என்று ஊடகங்களில் ஓலமிடும் இவர்கள் தமது கட்சியின் யாப்பில் தமது கொள்கையாக ஒற்றை ஆட்சியின் கீழ் தான் இலங்கை தீவு இருக்கும் என்பதை துல்லியமாக வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

இத்தகையவர்கள் தமிழ் மக்களுக்கு இன்று சமஸ்டி முறையிலான தீர்வை கோருவது எந்தப் பொறிமுறையில் அமையவேண்டும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்களா?

மலையக மக்களின் குடியுரிமை

தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு - ஶ்ரீரங்கேஸ்வரன் | Srirangeswaran Telling About Gajendrakumar Sl

இதேவேளை அன்று மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமையை அன்றைய ஆட்சியாளர்கள் பறித்தபோது அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த கஜேந்திரன் குமார் பொன்னம்பலத்தின் பேரன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் வி. குமாரசுவாமி ஆகியோர் தங்களுக்கு வாக்களித்த மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தனர்.

அதற்கு கைமாறாக அன்றைய ஆட்சியில் கைத்தொழில் அமைச்சை குமார் பொன்னம்பலமும் இராஜாங்க அமைச்சை குமாரசுவாமியும் இலஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்தனர்.

தற்போது கூட ஒற்றையாட்யின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களில் முதல்வராகவும் தவிசாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் உறுதிப்பிரமாணம் செய்து அங்கம்வகித்துக்கொண்டு பின்னர் 13 ஆவது அரசியலமைப்பை தென்னிலங்கை இனவாதக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாதக அவர்களுடன் இணைந்து எதிர்ப்பதாக மக்களை அடிமுட்டாளாக்குகின்ற இழிவான அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் கஜேந்திரமாரது குழுவினர்தான் தமிழ் தேசத்தின் மாபெரும் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுயநலத்துக்காக யாருடன் ஒட்டி வாழவில்லை. எமது தேவைகளுக்காக எவரிடமும் மண்டியிடப் போவதுமில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே தென் இலங்கையை அரசிடம் நாம் அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றோம் எமது அரசியல் நிலைப்பாடு தான் சரி என்பதை இன்று கஜேந்திரகுமாரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

சமஸ்டி என்பது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கட்சி என்பதற்குள் தான் பிணைந்துள்ளது. இதைத்தான் கஜேந்தரகுமார் குழுவினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் “கஜேந்திஜரகுமாருக்கு மட்டும் தான் சமஸ்டி சொந்தமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்கள் அணை உள்ளது” என தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

இதனை பொறுத்தக்கொள்ள முடியாத கஜேந்திரகுமார் குழு எம்மீது வழமைபோன்று அவதூறுகளையும் சேறுபூசல்களையும் மேற்கொள்ள முனைந்தள்ளது.

அந்தவகையில் தமிழ் மக்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை மாபெரும் துரோகத்தைச் செய்து வரும் கஜேந்திரகுமார் குழு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025