இந்தியத் தூதுவருடன் என்ன பேசினீர்கள்? தொடர்ந்தும் ‘பழைய குருடி’ கதைதானா!

S. Sritharan India Sonnalum Kuttram ITAK
By Independent Writer Apr 05, 2024 09:47 AM GMT
Report

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக அமோக ஆதரவுடன் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் புதிய இந்தியத் தூதருடன் சந்திப்பை மேற்கொண்டதாகப் புகைப்படங்கள் மற்றும் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களது அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் உள்ளிட்ட பலநிலைப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் தலைவர்களின் உத்தியோபூர்வச் சந்திப்புக்கள் என்பது வெறுமனே குடும்ப நிகழ்வுகள் அல்ல. மக்களின் நலன்சார்ந்த சந்திப்புக்கள்.

அந்தச் சந்திப்புக்களில் பேசப்படுகின்ற விடயங்கள் அந்தத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு கூறப்படவேண்டும்.

குறைந்தது அந்தக் கட்சியில் உள்ள ஒருசிலருக்காவது பரிமாறப்படவேண்டும்.

சிறீதரன் இந்தியத் தூதர் சந்திப்பு என்பது ஒரு முக்கியமான காலகட்டத்தில் நடைபெற்ற சந்திப்பு.

தமிழ் மக்களின் பிரதிநிதியாக, முக்கிய ஒரு தமிழ் தரைவராக அவர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது தமிழ் மக்களின் என்னென்ன பிரச்சினைகள் பேசப்பட்டன என்பது மக்கள் அறிந்தேயாகவேண்டிய விடயங்கள்.

  • தமிழ் மக்களின் வழிபாட்டிடங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்டுவருகின்ற விடயங்கள் பேசப்பட்டனவா?
  • தொல்பொருள் திணைக்களங்கள் மேற்கொண்டுவருகின்ற அடாவடித்தனங்கள் பேசப்பட்டனவா?
  • தொல்பொருள் திணைக்களங்களுக்கும், பௌத்த சின்னங்களை அமைப்பதெற்கென்றும் அந்திய அரசாங்கத்தினால் பௌத்த பேரினவாதிகள் ஊக்கப்படுத்தப்பட்டுவருவது பற்றி பேசப்பட்டதா?
  • இந்தியா வழங்கிய 13வது திருத்தச் சட்டம் தேவையற்றது என்று கூறி அதற்கு எதிராக நிலைப்பாடு எடுத்துவருகின்ற ஜே.வி.பியை அழைத்த இந்தியா அவர்களுடன் என்ன பேசியது என்ற விடயங்களும் அங்கு பரிமாறப்பட்டதா?
  • நடைபெற இருக்கின்ற அதிபர்த் தேர்தலுக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று ஏதாவது உங்களுக்கு கூறப்பட்டதா?
  • கச்சத்தீவை இந்தியா கையகப்படுத்துவது தொடர்பாக ஈழத்தமிழ் மக்களின் கரிசனையை நீங்கள் இந்தியத் தூதரிடம் வெளிப்படுத்தினீர்களா?

நீங்கள் மக்கள் பிரதிநிதியாக ஒரு வெளிநாட்டுத் தூதுவரைச் சந்தித்து மக்கள் பிரச்சினையைப் பேசியதாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்றால், மக்கள் சார்பாக என்ன பேசினீகள், உங்களுக்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பனவற்றையும் நீங்கள் மக்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

ஒரு நல்ல தலைவனுக்கு அதுதான் அழகு. அதுதான் தலைமைத்துவப் பண்பும் கூட..

சில வருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த காலகட்டங்களில் இப்படித்தான் புகைப்படங்கள் வெளியிடப்படும்.

இன்னார் இன்னாருடன் சுமந்திரன் பேசப்போகின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது. என்ன பேசினார் என்றும் கட்சியிலுள்ள யாருக்கும் தெரியாது. பேசி பேசி என்ன நடந்தது என்றும் யாருக்கும் தெரியாது.

வெறுமனே வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் இரகசியங்களை மாத்திரம் பேசி யாரும் இங்கு எதுவும் வெட்டிக் கிழிக்கவுமில்லை. இனி வெட்டிக் கிழிக்கப்போவதும் இல்லை.

விடயங்களை மக்கள்மயப்படுத்துங்கள். மக்களை அரசியல்மயப்படுத்துங்கள்.

இராஜதந்திர விடயங்களைக் கையாழுவதற்கு துறைசார் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து ஆலோசனை பெறுங்கள். வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் பேசிய விடயங்களை அந்த ஆலோசகர்களிடம் பரிமாறி, அலசி ஆராயுங்கள்.

தமிழ் மக்கள் சார்பாக ஒரு துரும்பு அசைவதாக இருந்தால்கூட அது தமிழ் மக்களின் நன்மை கருதித்தான் அசையவேண்டும்.

அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குங்கள்.

தமிழ் மக்கள் தானாகவே உங்கள் பின்னால் அணி திரழ்வார்கள். 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி