மகிந்த போல தன்னைக் காட்டிக் கொண்ட அநுரவின் அமைச்சர்: சிறீதரன் கொடுத்த பதிலடி
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை சரியான முறையில் கொண்டு செல்ல முடியாது மகிந்த போல அனைத்து மக்களும் ஒன்றாக வாழலாம் என விஜித ஹேரத் (Vijitha Herath) கூறுவது சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் கல்மடு நகர வேட்பாளரை ஆதரித்து கல்மடு கிராமத்தில் நேற்று (14) நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குருந்தூர் மலையில் எந்த ஒரு கட்டுமானங்களும் செய்ய கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், தீர்பை மீறி பௌத்த விகாரை கட்டப்பட்டது. ஏன் அதனை இந்த அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை?
தமிழர்களின் காணிகள் வலுக்கட்டாயமாக பிடிப்பது, தமிழர்களை இரண்டாம் குடிமக்களாக அகற்றுவது நியாயமற்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
