தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் வாதாடுவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலையாவது தொடர்பில் சுமந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட கருத்து குறித்து ஐ.பி.சி தமிழ் செய்திகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனுடன் கலந்துரையாடல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், நேற்றைய தினம் இந்த மாநாட்டுக்கு திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்கள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
இதையடுத்து, தனது கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் சுமந்திரனுடன் கலந்துரையாடவில்லை எனவும் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
அத்துடன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |