எமது ஆதரவின்றி எவரும் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது - மார்தட்டும் பெரமுன
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனவிலிருந்து அதிபர் வேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தற்போதையஅதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது தொடர்பில் கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என அதிபர் ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை சிறந்த இடத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
அதிபர் தேர்தல்

எவ்வாறிருப்பினும் தமது கட்சியின் ஆதரவின்றி எவரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது என அவர் தெரிவித்தார்.
அத்துடன் சிறிலங்காஅரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்ற மக்களுக்கு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கம் இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் பல போராட்டங்களின் பின்னணியில் நின்றதாகவும் போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைளின் போது தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்