மில்லியன் கணக்கில் இலாபத்தை ஈட்டியுள்ள அரச உர நிறுவனம்
அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா உரக் கம்பனியும், கொமர்ஷல் உரக் கம்பனியும் கடந்த வருடம் அதிகூடிய இலாபத்தைப் பெற்றுள்ளதாக இரண்டு உர நிறுவனங்களின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா(Jagath Perera) தெரிவித்தார்.
இதுவரை இரண்டு உர நிறுவனங்களாக இருந்த இரு நிறுவனங்களும், 2024ம் ஆண்டு முதல் அரச உர நிறுவனம் என்ற பெயரில் இணைக்கப்பட்டன.
கடந்த வருடம் 433 மில்லியன் ரூபா இலாபம்
அரச உரக் கம்பனியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இம்முறை மற்றும் அடுத்த பருவத்தில் உர விநியோகம் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera) இதனைத் தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா, இரண்டு இணைந்த உர நிறுவனங்களும் கடந்த வருடம் 433 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளன.
இதன்படி, இலங்கை உர நிறுவனம் 141 மில்லியன் ரூபாவையும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் 292 மில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |