பொதுவெளியில் ஏற்பட்ட சிக்கல் - உடற்பயிற்சியையே நிறுத்திய இராஜாங்க அமைச்சர் ?
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் டொரிங்டன் சதுக்கத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெரும் சிக்கலில் சிக்கியதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த இராஜாங்க அமைச்சர் ஒவ்வொரு நாளும் டொரிங்டன் சதுக்கத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அதன் விளைவாக ஒரு நண்பர்கள் குழு அமைச்சருடன் உடற்பயிற்சி செய்து வந்ததை அவதானித்தார்.
எனினும், அண்மையில் இராஜாங்க அமைச்சர் உடற்பயிற்சிக்காக சென்றிருந்த போதிலும், நண்பர்கள் எவரும் அவரை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் குழுவினருடன் உரையாடியபோது, பொருட்களின் விலையேற்றத்திற்கு அவர்கள் அனைவரும் அமைச்சரையே குற்றம் சுமத்தியதாக அறியமுடிகிறது.
குறிப்பாக பெண்கள் அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து பல நாட்களாகியும் அமைச்சர் எந்த ஒரு பயிற்சியிலும் பங்கேற்கவில்லை என தெரியவருகிறது.