புலம்பெயர் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் ஏமாற்றப்பட்ட ஓதுவார் : பரபரப்பு வாக்குமூலம்
சுவிட்சர்லாந்து(Switzerland), கனடா(Canada), பிரித்தானியா(UK) உட்பட பல நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோவிலில் ஓதுவாராகப் பணிபுரிந்துவந்த ஒருவர், தான் ஏமாற்றப்பட்டதாக ஒரு பரபரப்பு காணொளியை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில்(Kerala) உள்ள கோழிக்கோடு என்கின்ற இடத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர் நிதிகொண்டு அமைக்கப்பட்ட அந்தக் கோவிலில் 7 வருடங்களாக ஓதுவாராகப் பணிபுரிந்த அவர், அங்கு எதிர்கொண்ட அனுபவங்கள் பற்றி வெளியிட்டுள்ள காணொளி புலம்பெயர் பத்தர்களிடையே பரபரப்பாகி வருகின்றது.
பிரித்தானியாவில் அண்மையில் ஈழத் தமிழ் பெண்கள் மீதான தகாத சீண்டல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தவரும், நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் 4 மாதகால சிறைவாசம் அனுபவித்தவருமான ஒரு சாமியார் பற்றிய குற்றச்சாட்டுக்களை இவர் தனது காணொளியில் முன்வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓதுவாரின் வாக்குமூல காணொளியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்