கனடாவில் ஜி.யு. போப்பிற்கு திருவுருவச்சிலை - வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட தீவில் உள்ள பெடெக் நகரத்தில் கடந்த 15ஆம் திகதி ஜி.யு. போப் அவர்களுக்கு திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை உலகறியச் செய்த பெருமைக்குரிய போப்பிற்கு திருவுருவச்சிலை அமைக்கப்படுவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருஉருவச்சிலை

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக...
போப் அவர்கள் தமிழ்மொழிக்கு அளப்பரிய பணி ஆற்றியுள்ளார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் தமிழ் மொழியை தமிழர் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்த்தார்.
ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றிய இவருக்கு திருவுருவச்சிலை அமைக்கும் முயற்சியை முன்னெடுக்கும் கனேடியத் தமிழ்ப் பேரவைக்கும் கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” - என்றுள்ளது.