வல்வெட்டித்துறையில் குட்டிமணி - தங்கத்துரைக்கு சிலை: நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
மேலும் இந்த வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காவல்துறை
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்