கொழும்பில் சட்டவிரோத சிகரெட் விற்பனை - சீன பிரஜை ஒருவர் கைது!
கொழும்பில் சட்டவிரோத சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்களை விநியோகித்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் 1 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரை சிகரெட்களை விநியோகித்த குற்றத்திற்காக குறித்த சீனப் பிரஜையை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 மில்லியன் ரூபா அபராதம்

இந்த பொது அவரிடம் இருந்து 6,400 சிகரெட்களை அதிகாரிகள் மீட்டனர். இதன் பெறுமதி 760,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் திலின கமகே 1 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினர்

இதேவேளை, காலி மாகல்ல பிரதேசத்தில் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்களை வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
52 வயதுடைய அவர் சிகரெட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக காலி காவல்துறையில் கையளிக்கப்பட்டுள்ளார்.