அரச நிறுவனங்களை மேம்படுத்த மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
166 அரசுக்குச் சொந்தமான வணிக சாரா நிறுவனங்களால் செய்யப்படும் பொது சேவைகளின் தரத்தையும் ஒழுங்குமுறை செயல்பாடுகளையும் மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் முடிவின்படி எடுக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, அந்த 166 நிறுவனங்களால் வழங்கப்படும் பொது சேவைகளின் தரம், பொது சேவைகளை அணுகுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற குழு முடிவு செய்துள்ளது.
நிறுவன பட்டியல்
பரிந்துரைக்கப்பட்டுள்ள 166 நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடும் pmoffice.gov.lk என்ற முகவரியில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம்.
இதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த குழுவிடம் மக்கள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம் என்று பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |