அரசு நிறுவனங்களில் ஏற்பட காத்திருக்கும் மாற்றங்கள்
பல அரசு நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டரீதியான தடைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை மாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பல சட்டங்களைத் திருத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில், 2012 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை (திருத்தம்) சட்டம் உட்பட பல அத்தியாவசிய சட்டங்களை முதல் சுற்றில் திருத்துவது குறித்த கலந்துரையாடல்கள் தொடங்கியுள்ளன.
அரசாங்கத்திற்கு சிக்கல்
சட்ட வல்லுநர்களுக்கும்சட்டவரைஞர் திணைக்களத்திற்கும் இடையிலான இந்த கலந்துரையாடல்களுக்கு பிறகு இறுதி முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, அமைச்சரவையின் ஒப்புதலுடன் தொடர்புடைய திருத்தங்கள் வரையப்பட வேண்டும், பின்னர் அந்த வரைவு திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தத் திருத்தங்கள் தாமதமானால், அரசாங்கத்தின் விஞ்ஞாபன இலக்குகளை அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

